நாட்டின் சந்தைகளில், தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெங்குச் சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
ஒரு தேங்காயின் அதிக பட்ச விலையை 75 ரூபாவாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் தேங்காயின் விலை குறைவடைந்துள்ளதையும் தெங்குச் சபையின் தலைவர் கபில யகந்தாவல சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டில் போதியளவு தேங்காய் சந்தைக்கு கிடைத்து வருவதாக தெரிவித்த அவர் தேங்காய்க்கான தட்டுப்பாடு இருக்கவில்லை என்றும், தேங்காய் விற்பனையில், ஒரு மேலாதிக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுவே விலை ஏற்றத்திற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அடுத்த மாதமளவில் தேங்காய் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கூடுதலாக தேங்காய் சந்தைக்கு கிடைக்கும் போது தேங்காயின் விலை மேலும் குறைவடையும் என்றும், தெங்குச் சபையின் தலைவர் கபில யகந்தாவல மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.