வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில், அவரது கணவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் அளித்த வாக்குமூலத்திலேயே அவரது கணவர் வீட்டிலேயே கஞ்சா விற்பது தெரியவந்ததுள்ளது.
மேலும், கஞ்சா வாங்க மற்றும் விற்க வரும் நபர்களால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட அவர், கஞ்சா விற்பதை நிறுத்துமாறு கூறிய போது, கோபமடைந்த கணவன் தன்னைத் தாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பொலிஸார் இது குறித்து மேற்கொண்ட விசாரணைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 21 சிறிய கஞ்சா பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி சந்தேகநபருக்கு எதிராக, கஞ்சா விற்றமை மற்றும் பெண்ணைத் தாக்கியமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.