ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் வேகம் குறைவாக செயற்படுகின்றன என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவி வருகின்றது.
எனினும் இதன் மின்கலங்களை மாற்றீடு செய்வதன் மூலமும் வேகத்தினை அதிகரிக்க செய்ய முடியும் என அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஐபோன் பாவனையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு சலுகையினை வழங்க முன்வந்துள்ளது.
அதாவது வேகம் குறைவாக இருக்கும் ஐபோன்களின் மின்கலங்களை 29 டொலர்கள் பெறுமதியில் மாற்றீடு செய்து தர முன்வந்துள்ளது.
சாதாரணமாக ஐபோன் மின்கலங்களின் விலையானது 79 டொலர்கள் ஆகும்.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் 50 டொலர்கள் விலைக் குறைப்பு செய்து 29 டொலர்களின் மாற்றீடு செய்து தரவுள்ளது.
இச் சலுகையினை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம்; 2018 டிசம்பர் மாதம் வரை உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.