சவுதியில் நல்ல வேலை கிடைக்கும் என ஏமாந்து மோசமானவர்களிடம் சிக்கிய இந்திய பெண் தன்னை தாய் நாட்டுக்கு மீட்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் குல்தீப் கவுர் (50). இவரிடம் ஏஜண்ட் ஒருவர் சவுதியில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி அங்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் ஒரு சவுதி தம்பதி தங்களது துபாய் வீட்டில் வீட்டு வேலை செய்ய குல்தீப்பை கட்டாயப்படுத்தப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் குல்தீப்பை கொடுமைப்படுத்தி வரும் நிலையில் வீடியோ ஒன்ற குல்தீப் வெளியிட்டுள்ளார்.
அதில் அழுது கொண்டே பேசும் குல்தீப், என்னை கட்டாயப்படுத்தி வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள்.
டிராவல் ஏஜண்ட் என்னை ஏமாற்றி விட்டார், உணவு கூட எனக்கு தருவதில்லை, என்னை எப்படியாவது மீட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
குல்தீப்பின் மகள் சோனியா கூறுகையில், என் அம்மா கடினமான சூழலில் உள்ளார். வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தான் அவரை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
மோசடி செய்த ஏஜண்ட் மீது நடவடிக்கை எடுக்கவும் பொலிசாரை சோனியா வலியுறுத்தியுள்ளார்.