Loading...
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மக்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜேவிபி கட்சி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
Loading...
குறித்த அறிக்கை தொடர்பிலும் ஏனைய விசாரணைகள் குறித்த அறிக்கைகளை தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கும் நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்படுகின்றபோதும், அவை ஒரு அறிக்கையின் மூலம் மூடி மறைக்கப்படுகின்ற ஒரு கலாசாரம் பின்பற்றப்பட்டுவருதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...