கனடாவில் முதன் முறையாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வும், மற்றும் தமிழர் மரபு விழாவும் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் 19 மற்றும் 20, 21 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிகழ்வு மார்க்கம் மாநகரசபை மண்டபத்தில் ( 101 Town Centre Blvd ) நடைபெறவுள்ளது.
இதன்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2ஆவது தவணைக்காலத்தின் 8ஆவது அமர்வு நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் முதல் நாள் 19ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், 20ஆம் திகதி மாலை 5 மணியளவில் தமிழர் மரபு விழா Cedarbrae Colligiate Institute ( 550 Markham Rd. ) நடைபெறவுள்ளது.
எனவே குறித்த நிகழ்வில் பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.