அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் டேரன் லீமேனின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவுஸ்ரேலிய ரி-ருவென்ரி அணிக்கு, அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ரிக்கி பொண்டிங்குடன் அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை ரி-ருவென்ரி உலகக்கிண்ணத்தை வெல்லாத அவுஸ்ரேலிய அணி, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடத்தப்படும் ரி-ருவென்ரி உலகக்கிண்ணத்தை வெல்லுவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றது.
இதன் ஒரு கட்டமாக பொண்டிங்கை பயிற்சியாளராக நியமிக்க அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
2003 மற்றும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ணத்தை வென்றுக்கொடுத்த ரிக்கி பொண்டிங், கடந்த இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பயிற்சியாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.