ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, முதல் முறையாக கதாநாயகியாக நடிக்கும் படத்தில் பப்ளிக் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம்.
இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.
பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார்.
இந்நிலையில் தற்போது ஜூலி ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, ‘இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது.
மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்’ என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.