புத்தாண்டு என்றாலே பெரு நகரங்களில் கொண்டாட்டம் களைகட்டி விடும். மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சில பாலியல் அத்துமீறல்கள் எழுவது உண்டு.
கடந்த வருடம் பெங்களூரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. இந்த விஷயம் இந்தியாவையே அதிர வைத்தது.
அதே போல இந்த ஆண்டும் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்காக பெங்களூரு பிரிகேட் ரோட்டில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டனர்.
கடந்த முறை போல எதுவும் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணிக்காக மட்டுமே சுமார் 15 ஆயிரம் பொலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெரும்பாலானோர் குடிபோதையில் ஜோடி ஜோடியாக வந்திருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 12 மணி ஆனதும் அனைத்து இளம்ஜோடிகளும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து வரவேற்றனர்.
அந்த நேரத்தில் ஒரு இளம்பெண் மீது பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூட்டத்தில் இருந்து கதறியடியே ஓடினார்.
இதனை பார்த்த பொலீசார் அந்த பெண்ணை பின்னர் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் யாரும் இது குறித்து பொலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.