அண்மையில் நடைபெற்ற ரகர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்கள் கடுமையாக மோதிக் கொண்ட காணொளி வெளியாகி உள்ளது.
வெலிசரயில் நடைபெற்ற ரகர் போட்டியின் இறுதியில் மோதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் நாமல் ராஜபக்ஸ மற்றும் அவரது சகோதரர் யோசித ராஜபக்ச தலையிட்டுள்ளனர்.
கடற்படை அணிக்கும் C.H என்ட் F.C அணிக்கு இடையில் இடம்பெற்ற போட்டியின் இறுதியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் 27 – 24 என்ற கணக்கில் கடற்படை அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
பின்னர் இரண்டு குழுவுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளது.
C.H என்ட் F.C அணியில் யோசித ராஜபக்ஸ விளையாடியிருந்தார்.
இதேவேளை நாமல் மற்றும் யோசித ஆகியோர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக C.H என்ட் F.C அணியின் முகாமையாளரான தம்மிக்க மெதகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.