தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள உணவகத்தில் நேற்று பகல் வழங்கப்பட்ட உணவினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளனர்.
குறித்த உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் காணப்பட்ட பச்சை நிறத்திலான கோழி துண்டுகளே அதற்கு காரணமாகும்.
தேர்தல் நேரம் என்பதனால் கோழிக்கு பச்சை நிறம் பூசப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக அங்குள்ள பலர் தெரிவித்துள்ளனர்.
நேற்று போயா தினம் என்பதனால் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் விடுமுறையில் சென்றுள்ளனர். இதன் காரணமாக இது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் உணவகத்தின் உரிமையாளரிடம் வினவிய போது, உணவகத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக இவ்வாறு நிறம் மாறியுள்ளதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பச்சை நிற மரக்கறிகளின் நிறத்தை எடுத்து காட்டும் நிற சுவையூட்டி கோழிக் கறியில் மாறி கலந்தமையினால் கோழி பச்சை நிறத்தில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.