2018ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் புது சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சுவிஸ் குடியுரிமை
சுவிஸ் குடியுரிமை பெறுதல் இனி கடினமானதாக இருக்கும். அரசின் உதவித்தொகை பெறுவோரும் குற்றவாளிகளும் நிராகரிக்கப்படுவார்கள்.
ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை சுவிற்சர்லாந்தில் வசித்துவரும் ஊ குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமேஇ அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் இணைந்து வாழ்வதற்கான சான்றொப்பம் பெற்றுள்ளனரா என்பதன் அடிப்படையில் இனி சுவிஸ் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி எழுத்து வடிவ மொழித்தேர்வு உட்பட கடுமையான பல நுழைவுத் தேவைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
குழந்தையை தத்தெடுத்தல்
ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் முறையானது நீண்ட கடினமான ஒன்றாகவே நீடித்தாலும் தற்போது அது சற்று எளிதாக்கப்பட்டுள்ளது.
இனி தத்தெடுப்பதற்காக விண்ணப்பிப்பவர்கள் முன்போல் 35 வயதுடையவர்களாக இல்லாமல் குறைந்தது 28 வயதுடையவர்களாகவும் திருமணமாகி குறைந்தது முன்போல் ஐந்து ஆண்டுகளாக இல்லாமல் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
திருமணமான தம்பதிகளும் பதிவு பெற்று சேர்ந்து வாழ்பவர்களும் தங்கள் வாழ்க்கைத்துணையின் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.
மதிப்பு கூட்டு வரி (VAT)
ஜனவரி 1இலிருந்து மதிப்பு கூட்டு வரி (ஏயுவு) 8மூ இலிருந்து 7.7மூ ஆக குறைக்கப்படுகிறது. உணவகங்களுக்கான சிறப்புத் தொகை 3.7மூ ஆக இருக்கும்.
இந்த வரி குறைப்பானது குறைக்கப்பட்ட விலையாக நுகர்வோரைச் சென்றடையும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
மின்னணு செய்தித்தாள்களும் புத்தகங்களும் 2.5மூ ஏயுவுஇனால் நல்ல பலனடையும். முன்பு சுவிற்சர்லாந்தில் ஏயுவு விலக்குப் பெற்றிருந்த அந்நிய நாட்டு நிறுவனங்களின் வீட்டு உபயோகப்பொருட்களுக்கான கட்டணங்கள் உயரும். ஆன்லைன் ஆர்டர்களின் மீதான ஏயுவு மாற்றங்கள் 2019இல் அறிமுகப்படுத்தப்படும்.
தாய்மார்களுக்கான சலுகைகள்
2018இல் பகுதி நேரப்பணியாளர்கள் மற்றும் தாய்மார்கள் உட்பட இன்னும் அதிகமானவர்கள் இயலாமை நன்மைகளைப்பெற(னுளையடிடைவைல டீநநெகவைள) தகுதி பெறுவார்கள்.
தீவிர உடல்நலக்குறைவு அல்லது பெரிய குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளை வீட்டில் வைத்துக் கவனித்துக்கொள்ளும் குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்கவகையில் அதிக இயலாமை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
இது தவிர
தனித்திறன் தொழிலாளர்களின் தேவையைச் சந்திப்பதற்காக இன்னும் ஐரோப்பியரல்லாத 500 பேர் அல்லது மொத்தத்தில் 8000 பேருக்கு சுவிற்சர்லாந்து இடமளிக்க முடியும்.
பசுமை ஆற்றலின் விலை ஒரு கிலோவாட் மணிக்கு 1.5 சென்டிமீட்டரிலிருந்து 2.3 சென்டிமீட்டர்களாக உயரும்.