சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போது பல இடங்களில் கைது நடவடிக்கைகளும் அடிதடிகளும் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சூரிச் மாகாணத்தில் குடம்பத்தினர் மீது 3 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதுடன், சம்பவயிடத்தில் இருந்து தப்பித்தும் சென்றுள்ளனர்.
இதில் இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் Bellevue பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசார் ஒருவரை 17 வயது இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாஸல் மாகாணத்தில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தினிடையே 58 பகுதிகளில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
43 இடங்களில் மருத்துவ சேவைக்கு பரிந்துரைத்துள்ளனர். அது மட்டுமின்றி மது மற்றும் போதை மருந்து சம்பவம் தொடர்பாக 19 முறை பொலிசாரின் உதவிகள் நாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.