தமிழ் பேசும் மக்களுக்காக பாரிய் அபிவிருத்திகளை தாம் செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருந்த தீவிரவாதத்தை அழித்து சுதந்திரத்தை ஏற்படுத்தியதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு வீதிகள், கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை செய்து கொடுத்ததாகவும் ஆனால் அந்த அபிவிருத்தி தற்போது இருக்கின்றதா?’ என தமிழில் கேள்வி கேட்டார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான அபிவிருத்திகள் இல்லை எனவும் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ எனவே மொட்டுக்கு வாக்களிக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.