சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind ஆல் பனிச்சரிவு ஆபத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட புயல் Burglind ஆல் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் பேர்ன் மாகாணத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானர். மட்டுமின்றி விமான சேவை நிறுவங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு விமான சேவையையும் நிறுத்தியுள்ளது.
சில மாகாணங்களில் மிக முக்கிய தேவை இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் எனவும் பொலிசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பல பகுதிகளில் வகனங்கள் நிலைகுலைந்து கவிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி சாலை போக்குவரத்து சகய நிலைக்கு திரும்பவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.