இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஆரம்பமாகியுள்ளது.
கேப்டவுணில் ஆரம்பமாகியுள்ள இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தட தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கியுள்ள தென்னாபிரிக்க அணி, ஆரம்பதில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 12 ஓட்டங்களுக்கு 3 எனும் பரிதாமான நிலையில் இருந்தது.
எனினும் 4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார்.
டு பிளிசிஸ் நிதானமாக விளையாட டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
புவனேஸ்வர் குமார் வீசிய 9-வது ஓவரில் டி வில்லியர்ஸ் நான்கு பவுண்டரிககளை அதிரடியா ஆடி அணிக்கு வலுச்சேர்த்தார்.
எனினும் டி வில்லியர்ஸ் 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பும்றாவின் பந்தில் நேரடி இலக்கில் மூலம் வீழ்த்தப்பட்டு வெளியேறினார்.
தற்போது தென்னாபிர்க்கா அணி 53 ஓவர்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுள்ளது.