மகேந்திரசிங் தோனி, சுரேஸ் ரெய்னா , ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்டப் புகாரில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் இந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில் அணியில் உள்ள வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது.
இதில் மகேந்திரசிங் தோனி, சுரேஸ் ரெய்னா , ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அதே ஏலத் தொகையில் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டது.
பெங்களூரு அணியில் விராட் கோலி, ஏ.பி.டி வில்லியர்ஸ் தக்க வைக்கப்பட்டனர்.
கோலிக்கு 17 கோடி ரூபாய் வழங்க பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல்.ல்லில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கொல்கத்தா அணியில் இருந்து கவுதம் காம்பீர் விடுவிக்கப்பட்ட நிலையில் சுனில் நரைன், ஆண்ட்ரூ ரஸ்ஸல் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.