Loading...
கனடாவின் பிரபல நடிகையான எலன் பேஜ், தனது காதலியான எம்மா போர்ட்னரை திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
30 வயதான எலன் பேஜ், 23 வயது நடனக் கலைஞரான எம்மா போர்ட்னரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) திருமணம் செய்து கொண்டு இதனை முன்னணி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Loading...
அத்தோடு, எம்மா போர்ட்னர் போன்ற ஒரு அழகான பெண், என் வாழ்க்கைத் துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை என இன்ஸ்டாகிராமில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவருக்கு பலரும் இருவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
Loading...