கனடாவில் மருத்துவ Nவைக்காக கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை கனடாவின்; பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் இறுதி வரை கஞ்சா பயன்படுத்த வேண்டும் என நாட்டில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2லட்சத்து 35ஆயிரத்து 621 ஆக கடந்துள்ளது,
இது கடந்த மார்ச் மாதத்தை விட 40 சதவீதம் அதிகமாகுமென பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கஞ்சாவை பயன்படுத்தும் 0.6 சதவீத மக்கள் அதை வலிநிவாரணியாக பயன்படுத்துவது பொது சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.
அத்துடன் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக கஞ்சாவை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து கனடா எதிர்வரும் யூலை மாதம் முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கஞ்சா ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில் இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன், தற்போது பொழுதுபோக்குக்காக அமெரிக்காவின் பல மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்தப்படும் அனுமதியை ரத்து செய்ய திட்டம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக கனடாவில் கஞ்சா வரத்து திடீரென குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.