வெலிங்டன் நகரில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அதில் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று வெலிங்டன் நகரில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 315 ஓட்டங்ககை எடுத்தது.
நியூசிலாந்தின் அணி தலைவர் வில்லியம்சன் சதம் அடித்தார்.
வில்லியம்சன் 117 பந்துகளை எதிர்கொண்டு 115 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி அதிகபட்சமாக 3 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.
பதிலுக்கு 316 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாக்கிஸ்தான’ களமிறங்கியது.
இதனிடையே மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி 30.1 ஓவர்களாக ஆக குறைக்கப்பட்டு, 228 ஓட்டங்கள் வெற்றி; இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 30.1 ஓவரகள் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அத்துடன் இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 9-ம் தேதி நெல்சன் நகரில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.