தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை எடுத்திருந்தது.
தற்போது 96 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த போட்டி ஆரம்பமாகியது.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் ஆரம்பித்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அத்துடன் இன்று ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது தென்னாபிரிக்க வீர்ர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்து அடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
தற்போது 43.4 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 104 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.