கனடாவின் டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது.
எனினும் விமானத்தில் பயணிக்கவிருந்த 168 பயணிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 6 பேர்களும் பாதிப்புக்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
போயிங் 737 -800 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் மோதிய ஜெட் விமானத்தில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ரொறொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவாகும் இரண்டாவது விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓகஸ்ட் மாதம் கனடா மற்றும் போலாந்து ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்துக்குள்ளாயிருந்தன.
இந்த விபத்தில் விமானங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்த நிலையில் , எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.