டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான புதுச்சேரி பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஜெயா டி.வி உள்பட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதுஇ டி.டி.வி.தினகரன் வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்இ அதை தினகரன் மறுத்தார்.
அவ்வபோது விவேக் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதையும் அவர்களை அழைத்து விசாரணை நடத்துவதையும் வருமான வரித்துறை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்தநிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலையில் இருந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடும் எதிர்ப்பையும் மீறி டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார்.
வாக்குக்கு பணம் கொடுத்தது பற்றி பல்வேறு புகார்கள் அவர் மீது உள்ளது.
கடைசியாக ரூ.20 நோட்டை அட்வான்சாக கொடுத்து ஒட்டு வாங்கியது பற்றி தினமும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்இ தினகரனை மிரட்டும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.