உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்தவின் தரப்பில் போட்டியிடும் நடிகையான வேட்பாளர் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மதுஸா ரணசிங்க என்ற இந்த நடிகையிடம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் களமிறங்கும் பொதுஜன முன்னணியின் அலுவலர் ஒருவர் இவ்வாறு பாலியல் லஞ்சத்தை கோரியதாக முன்னதாக முறையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட வேண்டும் எனில் தனது நிர்வாணப்படம் ஒன்று வேண்டும் என்று தம்மிடம் கட்சி அலுவலர் ஒருவர் கோரியதாக குறித்த நடிகை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் தாம் முறையிட்டபோதும், வெறுமனே தான் இந்த சம்பவத்துக்கு வருந்துவதாக அவர் கூறி விடயத்தை முடித்துவிட்டதாக நடிகை சுட்டிக்காட்டியுள்ளார்.