நாட்டில் சகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன்; அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவதிலும் அனைத்து தரப்பினதும் அனுமதி அவசியம் எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க போவதில்லை என தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதில் நாமே முதலில் நிற்கபோவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று மத்திய வங்கி பிணைமுறி விவாகரத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சம்பிக்க ரணவக்க
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் மற்றும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கமாக தாங்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தீர்மானத்திலேயே தாங்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்த சம்பிக்க ரணவக்க குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தாங்களே முன்னின்று செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.