Loading...
கனடாவில் இன்று திங்கட்கிழமை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் கனடா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் இன்று இரவு பனிப்பொழிவு இருக்கும் எனவும், தெற்கு ஒன்றாறியோவில் 10 செண்டிமீட்டர் அளவுக்கு பனியின் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை அந்நாட்டு நேரப்படி 7 மணிக்கு வானிலை அறிக்கையானது வெளியிடப்பட்டது.
Loading...
பனிப்பொழிவின் தாக்கம் கிப்க்ஸ்டன், கோர்ன்வால் மற்றும் கிழக்கு ஒன்றாறியோவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் திங்கள் காலையிலேயே பனி பொழியலாம் எனவும், –6 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...