ஜேர்மனியில் 55 வயது பெண்மணி ஒருவரை கொடூரமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் திருமணமான தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்மணியின் உடலை வழிபோக்கர் உதவியால் குப்பை கிடங்கில் இருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெர்லினில் குடியிருக்கும் கொலை செய்யப்பட்ட ஆயசயைnநெ (55) என்பவர் பாலியல் விளையாட்டு தொடர்பான இணையதளம் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட வுயகைரn(36) மற்றும் அவரது காதலி ஜாஸ்மின் (27) ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து நட்பாக பழகிய மூவரும் வாடகை குடியிருப்பு ஒன்றில் ரகசியமாக பாலியல் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறித்த தம்பதி இருவரும் மரியன்னெவிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். இவை அனைத்தும் பாலியல் விளையாட்டின் ஒருபகுதியாகவே கருதபட்டும் வந்துள்ளது.
பல மாதங்கள் நீடித்த இந்த ரகசிய பாலியல் விளையாட்டில், ஒரு கட்டத்தில் சித்திரவதை கொடூரத்தால் மரியன்னெ உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடலை மறைக்க திட்டமிட்ட இருவரும், சாம்பல் நிற போர்வையில் சுற்றி குடியிருப்பின் அருகாமையில் உள்ள குப்பை கிடங்கில் போட்டுள்ளனர்.
அடுத்த நாள் வழிபோக்கர் ஒருவரால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜாஸ்மின் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரியன்னெ கொலைக்கு பின்னர் இருவரும் துருக்கி செல்ல திட்டமிட்டு விமான நிலையம் சென்ற நிலையில் அதிரடியாக செயற்பட்ட பொலிசார் விமான நிலையம் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.