Loading...
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர் பிரிவு இன்று ஆறாவது நாளாகவும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
வைத்தியசாலையில் வரவு மற்றும் செல்கையை பதிவு செய்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிக்கும் நடைமுறை அமுலாக்கப்பட்டமைக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த எதிர்ப்புக்கு அதிகாரிகள் உரிய பதில் வழங்காத நிலையில், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும், தாதியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
Loading...
இதன்காரணமாக வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை வலியுறுத்தி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு முன்பாகவும், நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாகவும் தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Loading...