Loading...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 17 வயதுடைய மாணவன் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலை மாணவி வீட்டில் தனிமையிலிருந்த நிலையில், இருவரும் இரகசியமான முறையில் சந்தித்துள்ளனர்.
Loading...
இதன்போது சிறுமியின் இணக்கத்துடன் மாணவன் பாலியல் வன்புணர்வில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...