Loading...
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை கடத்தப்போவதாக மிரட்டிய நபரை மும்பை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குறித்த நபர் சாராவை அவர் செல்லுமிடம் எல்லாம் பின் தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
Loading...
சாராவை தொடர்பு கொள்வதற்காக டெண்டுல்கரின் வீட்டில் உள்ள தொலைபேசிக்கு 20 முறைக்கு மேல் தொடர்பு கொண்ட குறித்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் திருமணம் செய்து வைக்கவில்லை எனில் சாராவை கடத்தப் போவதாகவும், டெண்டுகர் குடும்பத்தினரை மிரட்டியதாக பொலீஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...