Loading...
பசிபிக் கடற்பகுதியில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் உள்ள எரிமலை ஒன்று சாம்பல் புகையை வெளியிடத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிமலை கண்டறியப்பட்ட பின்னரான வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக புகையத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
4 புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவாக காட்சியளித்த இந்த பகுதி, தற்போது நெருப்பும் புகையுமாக மாறியுள்ளதால் அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீவின் சுமார் 60 சதவீதமான பகுதிகள் எரிமலையிலிருந்து வெளியான லாவா குழம்புகளால் சூழப்பட்டுள்ளன.
எரிமலை பெரிதாக வெடித்தால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Loading...