மேற்கத்திய கலாசாரத்தை தடுப்பதற்காக ஈரானில் தொடக்கநிலை பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஈரான் அரசு தடை விதித்துள்ளது.
ஈரான் நாட்டின் பாடசாலைகளில்; தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது.
இந்த நிலையில் தொடக்க பாடசாலை குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அதற்கான உத்தரவை ஈரான் உயர்நிலைக் கவுன்சில் பிறப்பித்துள்ளது.
இத்தகவலை கல்வித்துறை உயர் அதிகாரி மெக்தி நவீத் அத்காம் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்.
தொடக்கப் பாடசாலை குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதால் குழந்தைகள் மேற்கத்திய கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர்.
அதனால் ஈரானிய கலாசாரம் படிப்படியாக குறைந்து வருகிறது.
அதை தடுக்க ஈரானிய கலாசாரத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பாடசாலையில் படிக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொடக்கப் பாடசாலை குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தர விதிக்கப்பட்ட தடை உத்தரவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.