மட்டக்களப்பபு மாநகர சபைத் தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு – கொக்குவிலில் உள்ள குறித்த தேர்தல் அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி இரகுநாதன் என்பவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
அந்த முறைப்பாட்டில், இந்த தாக்குதலை நேற்று இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாதை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், கட்சி கொடியினையும் எரித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.