சுவிட்சர்லாந்தில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் வதிவிட அனுமதி பெறாத வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் அகதிகள் 287 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக Swiss State Secretariat for Migration தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு அகதிகள் தஞ்சம் அடைவதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
செனகன் ஒப்பந்தத்தின்படி, எந்த ஐரோப்பிய நாட்டின் எல்லைவழியே உள்நுழைந்தார்களோ, அதே நாட்டுக்கு திருப்பி அனுப்புவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கடந்தாண்டு மட்டும் 64 தனி விமானங்கள் மூலம் 287 வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 2016-ஆம் ஆண்டில் 67 தனி விமானங்கள் மூலம் 345 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதற்கான அரசின் செலவாக 3.7 மில்லியன் பிராங்குகள் தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டில் 40,000 புகலிட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு 27,000 விண்ணப்பங்களாக குறந்தது, 2017-ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.