Loading...
நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர், கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
இலங்கையில் சிறந்த வருமான ஈட்டுவதற்கான வழியை வழங்குவதே நல்லாட்சி அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருவதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க குறிப்பாக நாட்டின் உட்கட்டுமான வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...