தமிழ்நாட்டில் தமது சுய அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே இலங்கை தமிழர் விவகாரத்தை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த வேளை, நமல் ராஜபக்ஸ டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, நாமல் ராஜபக்ஸ, ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், சீமான் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த கருத்தினை பதிவிட்டுள்ளார்.
மேலும், இலங்கை தமிழர்கள் விடயத்தில் சீமானுக்கு உண்மையான அக்கறை இல்லை எனவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.