வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களின் மாற்றம் ஆகிய விடயங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் குறித்த வேண்டுகோளை முன்வைத்த வடக்கு மாகாண முதலமைச்சர் இந்த வருடத்திலாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவினை கொண்டாடும் நிகழ்வினை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஒழுங்கமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு வேண்டுகோள விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களைக் கௌரவித்து பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.