கனடாவில் உள்ள பண்ணை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர் பிழைத்த நிலையில் 4 செல்ல பிராணிகள் உயிரிழந்துள்ளன.
தலைநகர் ஒட்டாவாவில் உள்ள ஓஸ்குட் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 8.39 மணிக்கு தீவிபத்து ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது.
வீட்டில் தீப்பிடிக்க தொடங்கியதும் உள்ளிருந்த ஐந்து பேரும் வெளியில் ஓடி வந்ததால் உயிர் பிழைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி 2.29 மணிக்கு முழு தீயையும் அணைத்தனர்.
Fire on Stagecoach continues to burn aggressively. After this footage captured- 3/4 of home collapsed. @OttFire Firefighters continue defensive attack & cooling walls of adjacent structure to prevent further loss #ottnews pic.twitter.com/1EYWlOWVtN
— Danielle Cardinal (@OttawaFirePIO) January 9, 2018
தீப்பற்றிய வீடு இருந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயானது மளமளவென பரவியாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தின் முக்கிய பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த இரண்டு நாய்கள், ஒரு பூனை மற்றும் ஒரு முயல் இறந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.
வீட்டில் இருந்த 60 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட சிறிய காயத்துக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
வீட்டில் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.