பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் பன்றி இறைச்சி இடம்பெறும் நாட்களில் இஸ்லாமிய மற்றும் யூத மாணவர்களுக்கு மட்டும் மாற்று உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கத்தை பிரான்ஸ் நாட்டிலுள்ள Beaucaire நகரத்தின் மேயரான Julien Sanchez ரத்து செய்துள்ளார், இதனால் சுமார் 150 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
பிரான்சின் பாலின சமத்துவத்திற்கான அமைச்சர் Marlene Schiappa”மதச்சார்பின்மையை இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இது ஒரு மிகச்சரியான உதாரணம்” என்று தெரிவித்ததின் மூலம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்றில் இந்தக் கொள்கை மாற்றத்தை அறிவித்த Sanchez, பன்றி இறைச்சி இல்லாத உணவு Republicanகளுக்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார்.
இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் என்று தெரிவித்துள்ள Beaucaire இன் எதிர்க்கட்சித் தலைவரான Laure Cordelet, இது வட ஆப்பிரிக்க Maghreb சமுதாயத்திற்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மதச்சார்பின்மை என்னும் பெயரில் இதை நியாயப்படுத்தமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பெற்றோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ஜனவரி 15 திங்கட்கிழமையன்று Town Hall முன்பு Picnic protest ஒன்றிற்காக ஒன்றுதிரள இருக்கிறார்கள்.