தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகை முதல்கட்டமாக 750 கோடி ரூபாய் பொங்கலுக்குள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
முதல்கட்டமாக 750 கோடி ரூபாய் நிலுவை தொகை, போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
அந்தத் தொகையும் பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்தத் தொகை 750 கோடி ரூபாயையும் சேர்த்து, போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கவேடிய ஓய்வுக்கால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழக அரசு 2,147 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.