கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்காக பதவியேற்றுக்கொண்டார்.
இதனால் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டு என்ற வரையறை பொருந்தாது, அவர் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
அத்துடன் 19ஆவது திருத்தச் சட்டம் கடந்த காலத்திற்குரிய சட்டம் அல்ல எனவும் அது எதிர்காலத்திற்கு பொருத்தக் கூடிய சட்டம் எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
இதனால், எதிர்காலத்தில் ஜனாதிபதியாக பதவிக்கு வருபவர்களின் பதவிக்காலமே
5 ஆண்டுகளாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறு வருடகாலம் ஜனாதிபதியாக பதவி வகிப்பதில், சட்ட பிரச்சினைகள் இருக்கின்றவா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் சட்டவிளக்கம் கோரியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த கோரிக்கையை இன்று முற்பகல் 11 தொடக்கம் 5 உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.