சுமார் 75 மில்லியன் பொறுமதியான சொத்து மற்றும் பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று குற்றப்பத்திரம் கையளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதியரசர் விகும் களுவாரச்சியினால் இவ்வாறு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலா 5 லட்சம் ரூபா பொறுமதியாக இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
விமல் வீரசங்ச அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் சுமார் 75 மில்லியன் பெறுமதியான சொத்து மற்றும் பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக, லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு மேல் நீதிமன்ற நீதியரசர் உத்தரவிட்டார்.