Loading...
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளையுடன் (12.01) 310 வது நாளை எட்டுகிறது.
எனினும் தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய அவதானம் செலுத்தவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக அலுவலகத்தின் முன்னாள் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அதிகாரிகள், சர்வதே தொண்டு அமைப்புக்களின் அதிகாரிகள், வெளிநாட்டு ஊடகவியாளர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை,
சென்று சந்தித்துள்ள போதும், இதுவரை உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...