புதிய வருடத்தில் குறைந்த வருமானம் பெறும் கனேடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் செய்யலாம் என தேசிய வருமான வரி அமைச்சர் டயான் லெபௌதில்லர் தெரிவித்துள்ளார்.
இதற்காக குடைந ஆல சுநவரசn எனப்படும் ஒரு தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய வருமான வரி அமைச்சர் மேலும் தெரிவித்தள்ளார்.
குறித்த சேவையின் ஊடாக, குறைந்த அல்லது வருடத்திற்கு வருடம் மாறாத நிலையான வருமானம் கொண்ட கனடியர்கள் தொலைபேசி ஊடாக கேள்வித் தொடர்கள் ஒன்றிற்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் வரமான வரி விபர அறிக்கையை சமர்ப்பிக்கலாம் எனவும் தேசிய வருமான வரி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சேவையின் மூலம் சுமார் 9லட்சத்து 50ஆயிரம் கனடியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.