புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் சமஸ்டிக்கான அடிப்படை பண்புகள் காணப்படுவதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன் ஏக்கிய ராச்சிய – ஒருமித்தநாடு என்பன குறித்து தெளிவான பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அதற்காக வீணாக குழம்பத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதுபற்றி தெரிந்தவர்கள் கூட தமது அரசியல் லாபங்களுக்காகவே எதிர்க்கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் சமஸ்டிக்கான அடிப்படை விடயங்கள் காணப்படுவதாகவும், அவற்றை செழுமைப்படுத்த வேண்டும் எனவும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாறாக, குறித்த அறிக்கையை முற்றாக எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாதென தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.