சுவிட்சர்லாந்தில் Lobsters கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விலங்கு உரிமைகள் சட்டத்தரணிகளும் சில விஞ்ஞானிகளும் Lobsters போன்ற கடல் உயிரினங்களுக்கு வளர்ச்சியடைந்த நரம்பு மண்டலம் இருப்பதாகவும் உயிருடன் கொதிக்க வைக்கப்படும்போது அவற்றிற்கு வலி ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிஸ் அரசாங்கம் Lobsters ஜ பனிக்கட்டியில் அல்லது மிகக் குளிர்ந்த நீரில் வைத்து கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவை அவற்றின் இயற்கைச் சூழலிலேயே வைக்கப்படவேண்டும் என்றும் கொல்லப்படுவதற்கு முன் அவை மின்சார அதிர்வினால் செயலிழக்கச் செய்யப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
குறித்த சட்டங்கள் மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிவிப்பினால் சமையற்கார்களை கோபமடையச் செய்தாலும் விலங்கு உரிமைகள் குழுக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே போன்ற சட்டம் ஒன்று இத்தாலியில் இயற்றப்பட்டதை அடுத்தே சுவிஸ் அரசும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மேலும் நாய்கள் குறைப்பதை நிறுத்துவதற்காக அணிவிக்கப்படும் மின்சாரப் பட்டைகளுக்குத் தடை, வளர்ப்புப் பிராணிகளை சிறிய கூண்டுகளில் அடைத்தல் போன்ற விடையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், விலங்குகள் மீது நடத்தப்படும் பரிசோதனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.