தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை நகர்ப்புற ஏழைகள் வளர்ச்சி என்ற பெயரால் விரட்டப்படுவதாக நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவர் மேதா பட்கர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சென்னை இன்று பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மேதா பட்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நகரின் மக்கள் தொகையில் 25 சதவீதமாக உள்ள குடிசைப்பகுதி மக்கள், நீர்ப்பாதை மேம்பாடு என்ற பெயரால் நகருக்கு வெளியே குடியேற்றப்பட்டாலும், இதன் பின்னணியில் வணிக நோக்கம் இருப்பதாகவும் மேதா பட்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக நகரிலிருந்து தொலை தூரம் உள்ள பகுதிகளில் குடியேற்றப்படுவதால், தொழில் இழப்பு, கல்வியில் இடைநிற்றல் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பதாக மேதா பட்கர் கவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சென்னையில் குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்ட இடங்களை மேதாபட்கர் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.