திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற்று சட்டமன்றத்திற்கு வரவேண்டும் என துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம், பேரவையை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை வாசித்தார்.
இதன்போது சபாநாயகர், முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர், எதிர்கட்சித் துணை தலைவர், கொறடாக்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவது குறித்துப் கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்,
அவர் விரைவில் குணமடைந்து பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும்; தெரிவித்தார்.
இதேவேளை தமிழ்நாட்டில் அண்மையில் ரஜனிங்காந் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்திருந்தார்.
இதனுடைய வெளிப்பாடாகவே கருணாநிதி தமிழக பேரவையில் கலந்து கொள்ளவேண்டும் என்ற மறைமுகமான பயத்தை ஓ.பன்னீர்செல்வம், வெளியிட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.