வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையானது ஒன்பதாவது இடத்தில் இருந்த தற்போது முதலாவது இடத்தினை பிடித்துள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் க.சர்வேஸ்வரன் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே க.சர்வேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
தெடர்ந்து கருத்து தெரிவித்துள்ள க.சர்வேஸ்வரன்
கடந்த வருடம் (2017) நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய ரீதியாக முதலாம் மற்றும் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையிலான முன்னேற்றத்தினை வடமாகாணம் கண்டுள்ளது. இதேபோன்று, தேசிய விளையாட்டுக்களிலும் முன்னேற்றத்தினைக் கண்டிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் 12 பதக்கங்களைப் பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்த நாம் இப்போது 21 பதக்கங்களைப் பெற்று எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
ஆசிய இளையோர் எறிபந்து அணியின் சார்பாக இலங்கையில் இருந்து சென்றவர்களில், யூனியன் கல்லூரி மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர். இந்த ஆண்டு சர்வதேச ரீதியாக பல மாணவர்கள் பங்கு பற்றியுள்ளதுடன், தங்க பதக்கங்களும் பெற்றுள்ளனர்.
இவற்றினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பல முன்னேற்றத்தினைக் கண்டுள்ளோம். எதிர்வரும் வருடங்களிலும், எமது மாணவர்கள் சாதனைப் படைக்க வேண்டும்.
இதேவேளை, பின்தங்கிய நிலையில் வடமாகாண கல்வி இருப்பதாக யாராலும் கூற முடியாத முன்னேற்றத்தினைப் பெற வேண்டும்.
கடந்த வருடம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு தனது நன்றிகளையும்’ வடக்கு மாகாண அமைச்சர் தெரிவித்தார்.