Loading...
ஆண்டாள்’ குறித்து தவறாக விமர்சனம் செய்ததாக கூறி கவிஞர் வைரமுத்து மீது மூன்று பிரிவுகளின் கீழ் இன்று (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவல்லிப்புத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஆண்டாள்’ குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாகக் கூறப்படுகிறது.
Loading...
எனினும், தன்னுடைய பேச்சுக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இந்து முன்னணி சார்பில் அதன் செயலாளர் சூரி, விருதநகர், இராஜபாளையம் நகர பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, வைரமுத்து மீது தெற்கு இராஜபாளையம் போலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
Loading...